அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் தலைமையில்
நகர செயலாளர் செந்தமிழன், எம்ஜிஆர் இளைஞரணி மாநில துணை செயலாளர் கோமல் அன்பரசன், எம்ஜிஆர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நாஞ்சில் கார்த்தி, நகர இளைஞரணி செயலாளர் உமர், நகர் மன்ற உறுப்பினர் சதிஷ், மற்றும் உளுத்து குப்பை ஊராட்சி மன்ற உறுப்பினர் எஸ் எஸ் ரியாஸ்,உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலையின் உருவபொம்மையை சாலையில் போட்டு எரித்து, செருப்பால் அடித்து, காலால் மிதித்து, ஆபாச வார்த்தைகளால் திட்டியும் கண்டன கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.