ஊட்டி.மார்.01.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் டயாலிசிஸ் நோயாளிகள் தங்களுக்கு சிகிச்சை பெற கோவை மற்றும் உதகை செல்ல வேண்டும் .தற்போது நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வந்தனர் இந்நிலையில் கோத்தகிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்க சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாக அனுமதி உடன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான டயாலிசிஸ் கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு குன்னூர் கோட்டாட்சியர் சங்கீதா ஐஏஎஸ், உதகை மருத்துவ இயக்குனர் டாக்டர் நாக புஷ்பராணி , மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, ரோட்டரி நிர்வாகிகள் ரவிக்குமார் ,தேவராஜ் ,தலைவர் நஞ்சன் செயலாளர் அரவிந்த் ,ஜேக்கப் பால், முன்னாள் தலைவர்கள் கமல சீராளன் , சென்னராஜ் ,ராஜ்குமார், சங்கர், ஆதர்ஷ் கிரிப்பா, மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள், லயன்ஸ் கிளப் தலைவர் ராமச்சந்திரன் ரெட்டி, கோத்தகிரி அரசு மருத்துவமனை அலுவலர் டாக்டர் சிவக்குமார், இன்னர் வீல் கிளப் உறுப்பினர்கள், சிட்டிசன் அமைப்பு, சில்ல பாபு, வீரபத்திரன், பிரேமா மற்றும் பொதுமக்கள் அரசு மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் என கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் டயாலிசிஸ் கட்டிடத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டவர்களுக்கு கோட்டாட்சியர் சால்வை அணிவித்து கௌரவித்தார். முன்னதாக முன்னாள் ரோட்டரி தலைவர் தேவராஜ் வரவேற்றார், செயலாளர் இன்ஜினியர் பரமேஷ் நன்றி கூறினார்.