திருப்பூர், ஜூலை:6
திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கம் சார்பில் பில்ட் எக்ஸ்போ 24’இன்று துவக்கம் வரும் 8ம் தேதி வரை திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் பில்ட் எக்ஸ்போ 24 கண்காட்சி நடைபெறுகிறது.
தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடக்கும் இந்த கண் காட்சியில் கட்டட
கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை பொதுமக்களுக்காக 150 அரங்குகளில் காட்சிப் படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து கண்காட்சி சேர்மன் மோகன்ராஜ் கூறுகையில் இந்த ஆண்டு இரண்டாவது ஆண்டாக கட்டுமானப் பொருட்கள் கண்காட்சியை நடத்துகிறோம்.
கடந்தாண்டு 80 அரங்குகளுடன் முதல் முறையாக துவங்கிய இந்த கண்காட்சி இந்த ஆண்டு 150 அரங்குகளுடன் விரிவு படுத்தப்பட்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.
சுமார் 250 கோடி ரூபாய் அளவிலான வர்த்தக விசாரணை இருக் கும் என எதிர்பார்க்கிறோம்.
நாள்தோறும் புதிய டிசைன்கள்
தொழில்நுட்பங்கள்
அறிமுகமாகி வருகிறது அதற்கேற்ப கட்டட பொறியாளர்களும் வீடு கட்டுவோரும் கட்டடம் கட்டும் எண்ணத்துடன் இருப்போர் அனைவருக்கும் கட்டுமான பணி சார்ந்த அப்டேட் ஆக இந்த கண்காட்சியை நடத்துகிறோம்.
இந்த கண்காட்சியை காண வருவோரின் குழந்தைகள் விளையாடுவதற்கான பிரத்யேக இடம், பார்வையாளர்களுக்கு அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு என அனைத்தும் உள்ளது. தினமும் மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகளும் உண்டு.
துவக்க விழாவினை துவக்கி வைத்து தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ்,
எம். எல். ஏ. செல்வராஜ், மேயர் தினேஷ்குமார்.3
வது மண்டல தலைவர் கோவிந்தசாமி
வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கராஜ், நேதாஜி கண்ணன்,ஜியாவு லக், ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்க தலைவர் சோலா செந்தில்குமார், செயலாளர் கோபால கிருஷ்ணன், கண்காட்சி செயலாளர் வேலுச்சாமி முன்னாள் தலைவர் சிவன்பாலசுப்பிரமணியம் உட்பட ஏராளமா நிர்வாகிகள் பங்கேற்றனர்.