தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற மாணவனுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலாங்குளத்தை சேர்ந்த மனோகர் என்பவரது புதல்வன் அருண் சந்தோஷ் இலஞ்சி பாரத் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார் இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று தென்காசி மாவட்டத்திற்கும் தான் கல்வி பயிலும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.இந்த மாணவரை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர்
கமல் கிஷோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
இதே போல் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மாணவர் அருண் சந்தோஷ்க்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்து வெகுவாக பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயரத்தினராஜன், மாணவனின் பெற்றோர் மனோகர்,
குடும்பத்தினர் சாந்தப்பன், சாய்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.