திருப்பத்தூர்:பிப்:29, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10, மற்றும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி முதல் அரசு பொதுத் தேர்வு எழுத உள்ளதால் மாணவர்கள் அனைவரும் சிறப்பாக பொதுத்தேர்வு எழுத பெற்றோர்களின் நல்ஆசிர்வாதம் பெற்று அதிகம் மதி பண்புகள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பிருந்தாவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் அதற்கான ஏற்பாடு செய்து மாணவர்கள் அவரவர் பெற்றோர் இடத்தில் பாத பூஜை செய்து நல்லசி பெறும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர். ஜி அசோகன் அவர்கள தலைமை தாங்கினார்.
பள்ளியின் நிர்வாக அலுவலர் (A.O) க. நந்தகுமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.பூங்கொடி அவர்கள் மாணவர்கள் எப்படி பொது தேர்வு எழுதுவது என்று அறிவுரை வழங்கினார்.
இதில் 330 மாணவர்களும் 600 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து மாணவர்கள் அனைவரும் தேர்வு சிறப்பாக தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துக்கள் கூறினார்கள்.
இவ்விழாவில் எஸ். சூரவேல்.Deputy BDO, TPT.
கே.பி.எஸ்.மாதேஸ்வரன்
திருப்பத்தூர் மாவட்டம் செயலாளர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
மற்றும் தாளாளர்கள் க. எஸ்.மேகன்குமார், ந. பாலஜி மற்றும் ஏ. சரவணக் குமார், ஆகியோர் இவ்விழாவில் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு நல்லாசி வழங்கினார்கள் சிறப்பு செய்தனர்.
தாளாளர் அசோகன் அவர்கள் கடந்த ஆண்டு நடைப்பெற்ற அரசு பொதுத் தேர்வில் பாடவாரியாக நூற்றுக்கு நூறு வெற்றி பெற்ற செய்த 33 ஆசிரியர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக அளித்து ஆசிரியர்களை ஊக்குவித்தார். இதில் அனைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொதுமக்கள் என பலருக்கு அமர்ந்து கொண்டு சிறப்பித்தனர்.