வேலூர்=09
வேலூர் மாவட்டம், வேலூர் காந்திநகர் ஆர்ஐசிடி கல்வி நிறுவன வளாகத்தில் ஆர்ஐசிடி கல்வி நிறுவனம், வேலூர் இரத்த மையம் ,டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, காட்பாடி ஜங்ஷன் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய இரத்தம் தானம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள் உதவும் உள்ளம் அறக்கட்டளை இரா. சந்திரசேகர் ,இந்திய செஞ்சிலுவை சங்கம் அவைத்தலைவர் செ.நா. ஜனார்த்தனன் ,உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் டாக்டர் லயன்.சி .பி. தேசி, மண்டல தலைவர லயன் வி காமராஜ் மாவட்ட தலைவர் லயன் எம். திலகர் ,
கேஜேஎல்சி செயலாளர் எஸ். கருப்பசாமி ,ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றி துவக்கி வைத்தனர். உடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அகில் இரத்தப் பரிசோதனை மையம் மேலாளர் என் .பிரசாந்த், டாக்டர் லயன் கே .எஸ். அஸ்ரப், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் , பொதுமக்கள் ,பலர் கலந்து கொண்டனர்.