திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் உதிரம் உயர்த்துவோம் அமைப்பின் சார்பில் உலக ஹீமோபிலியா தினத்தை முன்னிட்டு ரத்த தான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் மற்றும் மருத்துவகல்லூரி முதல்வர் சுகந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் மருத்துவம், கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி கல்லறை மேடு சிக்னல், காட்டாஸ்பத்திரி, நேருஜி நகர்.ஒய்.எம்.ஆர். பட்டி, பஸ் நிலையம், எ.எம். ல் சி. ரோடு, மெயின்ரோடு, ஆர்.எஸ். ரோடு, அண்ணா சிலை 5 கி.மீ தூரம் சென்று அரசு ஆஸ்பத்திரியில் நிறைவடைந்தது
இதில் முதல் பரிசு ரூ.7,500, 2ம்பரிசு 5000, 3ம் பரிசு ரூ.3000 ன் வழங்கப்பட்டது. மேலும் முதல் 10 இடங்களை, பிடித்தவர்களுக்கு சிறப்பு பரிசும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சைத்துறை இணை பேராசிரியர் திருலோகச்சந்திரன், துணை நிலைய மருத்துவர் செந்தில்குமரன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சுகந்தி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்கள் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் இரத்தமையங்களின் அவசியம் குறித்தும் , இந்திய அளவில் மற்ற மாநிலங்களில் இரத்த மையங்கள் மற்றும் இரத்ததானத்தின் அவசியம் குறித்து விரிவாகப்பேசினார்.
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ்,
சமூக சேவகர் மற்றும் மெர்சி பவுண்டேசன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார் ,
திண்டுக்கல் புறநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிபி சௌந்தர்யன் ஆகியோர் பங்கேற்று இரத்ததானத்தின் விழிப்புணர்வு மற்றும் அவசியம் குறித்து உரையாற்றினர்.
உதிரம் உயர்த்துவோம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்ததான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செந்தில்குமார் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் வீரமணி , துணைமுதல்வர் டாக்டர் கீதா ராணி , துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு, துணை மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் செந்தில்குமரன் , நோயியல் துறைத்தலைவர் டாக்டர் தமயந்தி முன்னிலை வகித்தனர்.
இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் சரண்யா , ஆய்வக நுட்புநர்கள் மகேஸ்வரி , ஜெயப்பிரியா , இரத்த வங்கி ஆலோசகர் சுகுமார் ஆகியோர் உதிரம் உயர்த்துவோம் அமைப்புக்கு உறுதுணையாக இருந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
உதிரம் உயர்த்துவோம் இரத்ததான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செந்தில்குமார், செயலாளர்கள் தாரிணி , கிரி சங்கர் , துணைச்செயலாளர்கள் தாக்சாயினி , ஜித்து ,திவ்யா மற்றும் உறுப்பினர்களான மருத்துவ மாணவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.



