மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆவேச பேச்சு
ராமநாதபுரம், நவ.15-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் கண்ணை கட்டிக்கொண்டு நீதி கேட்டு போராட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற கண்ணை கட்டிக்கொண்டு நீதி கேட்ட போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும் போது, “கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியில் 309ன் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என தெரிவித்த முதல்வர் அவர்களிடம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் அலுவலக வளாகத்தில் காலை முதல் மாலை வரை தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு அலுவலர்கள் கொரோனா காலத்திலும் பேரிடர் காலங்களிலும் தன்னலம் கருதாது அரசுக்காக மக்கள் நலன் கருதி இரவு பகல் பாராமல் பணியாற்றி உள்ளோம். எங்களின் ஒரே கோரிக்கை பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டும்தான். தமிழக முதல்வர் எங்களது கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்பதற்காக நீதி கேட்ட போராட்டம் நடத்தி வருகிறோம் எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்”
என்று பேசினார்.
சிவக்குமார் தலைமை வகித்து பேசினார். வைரவன் நன்றி கூறினார்.
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற நீதி கேட்ட போராட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார்.