வேலூர்_22
வேலூர் மாவட்டம் ,கே.வி.குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தில் வி.எஸ்.ஜே.ஸ்கூல் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி பள்ளியில் கருப்பு பட்டை மற்றும் கலர் பட்டை அளிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கராத்தே மாஸ்டர் ரென்சி டி.வினோத்குமார் . நிறுவனர் ஸ்கூல் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம்
காவல்துறை உதவி ஆய்வாளர் சரவணன் , மு.ரோட்டரி சங்கத் தலைவர் முரளி, ஆனந்தன், மு. இராணுவம், கோபி மு. இராணுவம், ஜெயபால் மு. இராணுவம் ,அன்பழகன் மு. இராணுவம்,
லோகநாதன் கேபிள் கனெக்சன், சசிகல வார்டு உறுப்பினர், .கல்யாணி வார்டு உறுப்பினர்,
அழகேசன், மு.இராணுவம்,
ரம்யா லெவல் 3 ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வி.எஸ்.ஜே.கராத்தே பள்ளியின் மாநில கராத்தே மற்றும் சிலம்பம் பிரிவின் துணைத்தலைவர் தவமணி மற்றும் .குபேந்திரன் (எ) பிரபு வழி நடத்தினர். இப்பள்ளியில் கராத்தே,சிலம்பம்,வளரி,வில் அம்பு ஆகிய சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அழிந்து வரும் கலைகளை மீட்டெடுக்கும் பொருட்டு கொக்கேலி ஆட்டம், தீச்சிலம்பம், வளரி ஆகியவை மாணவ மற்றும் மாணவிகளுக்கு இலவசமாக பயிற்றுவிக்கின்றனர்.
இப்பள்ளி குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கிராம மாணவர்கள் பயனடையும் வகையில் 31 கிராமங்களில் கருப்பு பட்டயம் பெற்ற மாஸ்டர்களால் இக்கலையை பயிற்றுவிக்கின்றனர்.
இப்பயிற்சிப் பள்ளியில் மட்டுமே மாவட்ட மற்றும் மாநில போட்டிகளில் பங்கு பெற பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாவட்ட மற்றும் மாநிலப் போட்டிகளில் தங்கம்,வெள்ளி, வெண்கலம் ஆகிய பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்ற மாணவர்களை விழாவில் சிறப்பிக்கப்பட்டனர், மேலும் அவர்கள் கல்லூரிகளில் விளையாட்டு பிரிவில் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்களையும் பாராட்டினார்கள்.இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் தற்போது இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் கராத்தே மாஸ்டர் நவீன் குமார் அவர்களையும் நேரில் அழைத்து பாராட்டுக்கள் தெரிவித்தனர்.இவ்விழாவில் கராத்தே மாஸ்டர்கள் , பூஜா,ஷர்மிளா, மணிகண்டன், ,ஜெகதீஷ், செல்வகுமார், கோகுல்,சரத், ஹரி,ருத்ரன், சூர்யா ஜெகதீஷ், அபிஷேக்,மதன் ,ஆகாஷ், ஓம் பிரகாஷ், லெனோதாசன், கௌதம்.ஆகியோர் உடன் இருந்தனர்.
கராத்தே மாஸ்டர் லோகநாதன் மற்றும் சரண் நன்றியுரையாற்றினர்.
இவ்விழாவில் மாச்சனூர் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



