மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஹெச்.ஜவாஹிருல்லா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி ஆகிய இருவரும் மீது அவதூறாக பேசிய தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தமுமுக, மமக சார்பாக மாவட்ட தலைவர் ஜூபைர் தலைமையில் புகார் மனு அளித்தனர். அப்போது தமுமுக மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கூறைநாடு பாசித், மாவட்ட துணை நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.



