திருப்பத்தூர்:மார்ச்:10, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட செவ்வாத்தூர் புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் காருண்யா சிறுவர் சிறுமியர் இல்லத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திமுக தகவல் தொழில்நுட்ப மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்நிதி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் முரளிதரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்துகொண்டு காருண்யா இல்லத்தின் சிறுவர் சிறுமியர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குணசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், தெற்கு ஒன்றிய செயலாளர் SKT அசோக்குமார், இலக்கிநாயக்கன்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சாந்தகுமார், திருப்பத்தூர் முன்னாள் நகர மன்ற தலைவர் அரசு, தகவல் தொழில்நுட்ப அணி செவ்வாத்தூர் பாலு , விளையாட்டு மேம்பாட்டு அணி சுகுமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் ஸ்டாலின் சக்திவேல், இளைஞரணி அமைப்பாளர் தமிழ், துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், யுவராஜ், கந்திலி மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் தமிழ் குடிமகன் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
காருண்யா சிறுவர் சிறுமியர் இல்ல ஜெயானந்தம், பிரபாகரன் ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.