தருமபுரியில் இந்திய அரசு மைபாரத் மற்றும் கலைத்தாய் சிலம்பம் இளைஞர் நற்பணி சங்கம் இணைந்து நடத்திய பிட் இந்திய மிஷனின் சைக்கிள் பிரச்சாரம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ அங்காளம்மன் பாரமெடிக்கள் கல்லூரியின் இயக்குனர் சிலம்பரசன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ அங்காளம்மன் பாரமெடிக்கள் கல்லூரியின் முதல்வர் துரை, அதியமான் டிவியின் இயக்குனர் கபில்தேவ், கலைத்தாய் சிலம்பம் இளைஞர் நற்பணி சங்கத்தின் செயலாளர் தீபக் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.



