தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாள் விழா ஊட்டி பகுதியில் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளால் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி, கொண்டாடப்பட்டது. அதிமுகவின் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. ஊட்டி நகர் பகுதியில் நடந்த விழாவில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வெற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



