சுருளி அருவியில் குளிக்க தடை தேனி மாவட்டம், ஜூலை -2 தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது இவை மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக தளமாகவும் சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது சுற்றுலா பயணிகள் ஆன்மீக பக்தர்கள் நாள் தோறும் அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர் இந்நிலையில் அருவிக்கு செல்லும் சாலையில் யானை கூட்டம் முகாமிட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையின் சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது



