ஈரோடு ஜன. 21
ஈரோடு ஆர்.ஏ.என்.எம். கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தராஜ கோபால் சுன்கரா மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் அஐய் குமார் குப்தா ஆகியோர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள ஒரு முதன்மை அலுவலர் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது மற்றும் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது தொடர்பான முதற்கட்ட பயிற்சி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்கள்.
அப்போது ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்
தெரிவித்ததாவது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 சதவீதம் கூடுதலாக (ரிசர்வ்) சேர்த்து 284 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள முதன்மை அலுவலர் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என 1194 அலுவலர்களுக்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்த முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றும் வகையில் அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நாளான 5 ந் தேதி அன்று பணியாற்ற ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி முதன்மை அலுவலர்களும் தலா 284 முதல் நிலை அலுவலர்கள் இரண்டாம் நிலை அலுவலர்கள் 284 மூன்றாம் நிலை அலுவலர்கள் மேலும் 1200 வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளுக்கு 58 நான்காம் நிலை அலுவலர்கள் என மொத்தம் 1194 அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் முதற்கட்ட பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூன்று பறக்கும் படைகள் 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 2 வீடியோ கண்காணிப்பு குழு இருந்த நிலையில் தற்பொது கூடுதலாக ஒரு வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை ரூ.12,72,860 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ரூ.3,30,860 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதி ரூ.9,42,000 கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது இது வரை
ரூ.37,733 மதிப்பிலான மதுபானம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சுவிதா போர்டல் ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதில் வரப்பெற்ற விண்ணப்பங்கள் மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் போன்றவற்றை தலைமை தேர்தல் அலுவலர் உட்பட பல்வேறு அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும், இவற்றை பார்வையிடுவதற்காக மூன்று தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் பிரச்சாரத்திற்கு விண்ணப்பம் அளித்த 24 மணி நேரத்திற்குள் விரைவாக பரிசீலனை செய்யப்பட்டு ஏற்பு அல்லது மறுப்பு குறித்து தகவல் அளிக்கப்படும். மேலும், இன்றைய தினம் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற அலுவலர்கள் இப்பயிற்சியை முழுமையாக கற்று இடைத்தேர்தலை சிறப்பான முறையில் தேர்தலங நடந்திட உறுதுணை புரிய வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையர் மனிஷ் மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.