மும்பை ,ஜூலை -19 இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா அதிக வட்டி விகிதங்களை வழங்கும் ஒரு சிறப்பு டெர்ம் டெபாசிட் திட்டமான பி.ஓ பீ மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் தொடங்கப்படுவதை அறிவித்தது.
399 நாட்களுக்கு என ஆண்டுக்கு 7.25% மற்றும் 333 நாட்களுக்கு.ஆண்டுக்கு 7.15% என்ற வட்டி விகிதத்தில் இரு வேறு கால வரையறைகளுடன் கூடிய தொகுப்பாக ” பிஒபீ மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டம் ” வழங்கப்படுகிறது.
ஜூலை 15, 2024 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ரூ. 3 கோடிக்கும் குறைவான தனிநபர் டெபாசிட்டுகளுக்கு இது பொருந்தும்.
மூத்த குடிமக்கள் தங்கள் டெப்பாசிட்டின் மீது –399 நாட்களுக்கு ஆண்டுக்கு 7.75% p.a. மற்றும் 333 நாட்களுக்கு 7.65% வட்டி என்ற விகிதத்தில் 0.50% கூடுதல் வருமானத்தை பெறுவார்கள். தவிர, முன் முடிப்பு விருப்பத்தேர்வை பயன்படுத்தாத டெபாசிட்டுக்களுக்கு மேலும் கூடுதலாக 0.15% உபரியாக வழங்கப்படுகிறது குறைந்த பட்சம் 1 கோடியிலிருந்து 3 கோடிக்கும் குறைவான டெபாசிட் தொகைக்கு இது பொருந்தும்.
பாங்க் ஆப் பரோடாவங்கியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ.சஞ்சை முதலியார் தெரிவித்ததாவது:.
பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் சேமிப்புகளின் மீது அதிக வட்டி விகிதத்தில் வருமானம் ஈட்டும் வாய்ப்பை வழங்கும் பீஓபீ மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. மேலும் இதன் இரண்டு காலவரையறைகளிலிருந்து உகந்த ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் இது அளிக்கிறது. தங்களது டெப்பாசிட்டுகளில் இருந்து அதிக இலாபத்தை ஈட்டுவதை உறுதி செய்வதற்கான ஒரு தருணமாக இது விளங்குகிறது ..
பீஓபீ மான்ஸூன் தமாக்கா டெபாசிட் திட்டத்தை ஆன்லைன் மூலமாக அல்லது வங்கியின் எந்த ஒரு கிளை மூலமாகவும் தொடங்கலாம் என்று தெரிவித்தார்.


