வேலூர்_27
வேலூர் மாவட்டம் , வேலூர் வட்டம் வல்லம் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மனுக்கு 7ஆம் ஆண்டு நடைபெற்ற பால் குடம் அபிஷேகம் பெருவிழாவில் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அபிஷேகமும், அலங்காரமும், சிறப்பு ஆராதனையும், திருவிளக்கு பூஜையும் ,பக்தர்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சியும் ,இதனை தொடர்ந்து அம்மன் உற்சவமும் , நாடகமும் வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் கிராம பெரிய தனம் ஆறுமுகம் ,எஸ் சம்பந்தம், எம் .பார்த்திபன் ,வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் சி .சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசி அருள், மாவட்ட கவுன்சிலர் எஸ் .தேவி ஸ்ரீ ,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி .அமுதா பழனி, நேதாஜி ,மற்றும் வார்டு உறுப்பினர்கள் ,ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் ,மற்றும் விழா குழுவினர்கள், பக்தர்கள் , பலர் கலந்து கொண்டனர்.