திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி பக்கீர் செய்யது சாயபு தர்காவில் கொடியேற்று விழா, உரூஸ் விழா, கந்தூரி விழா முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹிஜ்ரி 1446 ரபியுல் ஆகிர் பிறை 28 வெள்ளிக்கிழமை கணவாய்பட்டி பக்கீர் செய்யது சாயபு தர்காவில் கொடியேற்று விழா நிகழ்ச்சி தொடங்கியது. ஹிஜ்ரி 1446 ரபியுல் ஆகிர் பிறை 29 சனிக்கிழமை கோபால்பட்டி கணவாய்பட்டி பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வந்த ஜமாத்தார்கள் பக்கீர் செய்யது சாயபு தர்காவிற்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து சந்தன உரூஸ் ஊர்வலம், சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கந்தூரி விழா நிகழ்ச்சி ஹிஜ்ரி 1446 ரபியுல் ஆகிர் பிறை 30 ஞாயிற்றுக்கிழமை கந்தூரி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கந்திரி விழாவினை RFC மாங்கனி உரிமையாளரும், கணவாய்பட்டி பள்ளிவாசல் தலைவருமான
S.ராஜ்கபூர் கந்தூரி விழாவினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பள்ளிவாசல் செயலாளர் சையது முகமது, துணைத் தலைவர் சையது பாட்ஷா, பொருளாளர் ஷாஜகான், பள்ளிவாசல் ஜமாத்தார்கள் அலி முகமது, ஜெய்லானி, சாகுல் ஹமீது, முகமது உசேன், சையது முகமது முத்து முகமது, அப்துல்ஹமீது, சுலைமான், சரிப், நாட்டாண்மை மஸ்தான், அப்துல் சமது உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கந்தூரி விழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மும்மதத்தை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜமாத்தார்கள்,
ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.