ராமநாதபுரம், டிச.27-
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் கேணிக்கரை மகர் நோன்பு திடலில் பாகுபலி பொருட்காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி திறப்பு விழா நடந்தது. திமுக மாவட்ட செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தார். நகராட்சித்தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
கண்காட்சி
தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இப்பொருட்காட்சியில்
அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் மிகபிரமாண்டமாய் பாகுபலி தர்பார் பொருட்காட்சி, தத்ரூபமான சிலைகளுடன் அரண்மனை தர்பார் அமைக்கப்பட்டு காண்போர் வியக்கும் வகையில் ராமநாதபுரத்தில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்பொருட்காட்சியில் பெரியோர் முதல் சிறியோர் வரை கொண்டாடி மனம் மகிழ ஜெயிண்ட் வீல் ராட்டினம், கொலம்பஸ் ராட்டினம், டிஸ்கோ ராட்டினம், ஹெலிகாப்டர் ராட்டினம், டிராகன் ராட்டினம் இடம் பெற்றுள்ளன. ஜம்பிங் பலூன், யானை கார், பைக், படகு சவாரி, 3டி ஷோ, திகிலூட்டும் பேய் வீடு உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மகிழ்ந்திட நாவிற்கினிய பாப் கான், பஞ்சு மிட்டாய் பேல் பூரி, சோலா பூரி, டில்லி அப்பளம், உருளைக்கிழங்கு ஸ்டிக் ரோல், மிளகாய் பஜ்ஜி, காலிபிளவர், ஜில் ஜில் ஜிகர்தண்டா. உச்சி முதல் பாதம் வரை குளிரூட்ட குளு குளு ஐஸ் கிரீம் வகைகள் கிடைக்கும் பாகுபலி தர்பார் பொருட்காட்சி கண்காட்சியில் வீட்டிற்கு தேவையான பொருட்கள், மகளிருக்கு தேவையான பேன்சி பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மை வகைகள் விற்பனை செய்கின்றனர் அனைத்து வயதினரும் விரும்பி ரசிக்கும் வகையில் பண்டிகை கால பொருட்காட்சியை உதயகுமார் ஏற்பாடு செய்துள்ளார்.