மயிலாடுதுறை மே 15
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மயிலாடுதுறை மாவட்டம் மேலையூர் அருகே உள்ள தனியார் (அழகு ஜோதி அகாடமி) பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில் லோகேஷ் என்ற மாணவர் 485 மதிப்பெண்கள் பெற்று மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அழகு ஜோதி அகாடமி மாணவி லக்ஷயா 483 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இரண்டாமிடம் பெற்றுள்ளார்
இதே போன்று சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அழகு ஜோதி அகாடமி பள்ளி மாணவி ஆதிலக்ஷயகவி 491 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடமும், தேஜஸ்வினி என்ற மாணவி 489 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவர்கள் தங்களது பெற்றோருடன் இணைந்து பள்ளி வளாகத்தில் உள்ள முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் திருஉரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தங்களுடைய வெற்றியை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து கேக் வெட்டி மாணவர்களை பாராட்டினர்.
மாணவர்களும் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு இனிப்புகளை பரிமாறி தங்களுடைய வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் உணர்ச்சி பூர்வமாக நன்றி தெரிவித்தனர்.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் 100 விழுக்காடு வெற்றி சாதனை படைத்த மாணவ மாணவிகளை அழகு ஜோதி அகாடமி கல்வி நிறுவனத் தலைவர் கண்ணன், தாளாளர் சிவக்குமார், கல்வி நிறுவன இயக்குநர்கள் கவிதா, அனிதா, முதன்மை செயல் அலுவலர் கலாநிதி, உதவி முதல்வர் அமுதா, நிர்வாக மேலாளர் சிவபரமகுரு, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர்.