தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் உதவி எண் 181 மற்றும் காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் பங்கேற்ற நடைப்பயணம் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நடைப்பயணத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். இந்த நடை பயணம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இது குறித்து ஆட்சியர் மற்றும் எஸ் பி கூறியதாவது. ஆணுக்கு பெண் எவ்விதத்திலும் குறைவில்லை என்பதை பறைசாற்று நிகழ்வாக இந்த விழிப்புணர்வு நடை பயணம் அமைய வேண்டும். என்பதற்காக தனியார் மகளிர் கல்லூரி மற்றும் அரசு கல்லூரி மாணவிகள் அழைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பெண்களின் பாதுகாப்புக்காகவும், மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து காவல்துறை துணை நிற்கும். காவல்துறை, மருத்துவ துறை, சமூக நலத்துறைகளை உடனடியாக நாடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட டோல் பிரி நம்பர் 181, பெண்கள் உதவி எண் மற்றும் காவல் உதவி செயலி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடை பயணத்தில் கலந்து கொள்ளும் மகளிருக்கு டி சர்ட் வழங்கப்பட்டுள்ளது. காவல் உதவி செயலி, பொது மக்களுக்கு எந்த ஒரு துயரம் மற்றும் அவசர நிலையின் போதும், காவல் உடனடி உதவி பெறுவதற்கும், காவல் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய பயன்பாட்டுக்காகவும் ஏற்படுத்தப்பட்ட செயலியாகும் இதில் அவசர எச்சரிக்கை பட்டனும் வழங்கப்பட்டுள்ளது. அருகாமையில் உள்ள போலீஸ் ஸ்டேசன், பிற உதவி சேவை மையங்கள், லொகேசன் பைண்டர் ,எப் ஐ ஆர் மற்றும் சி எஸ் ஆர் நிலையை நிலைய றிதல் போன்ற வசதிகள் இந்த சேனலில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் மற்றும் எஸ் பி தெரிவித்தார்கள். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி மற்றும் பெண் போலீசார், மகளிர் தன்னார்வலர்கள், கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



