ஆத்தூர் அருகே போடிக்காமன்வாடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் “பசுமைக் குறள்”அமைப்பினர் சார்பில் பிளாஸ்டிக்கை தவர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது….
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள போடிகாமன்வாடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா(2000-25) ஆண்டை முன்னிட்டு பசுமை புரட்சியை ஏற்படுத்தி வரும் தன்னார்வ குழுவினரான பசுமைக் குறள் அமைப்பினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் டேவிட் ஹென்றி ஜார்ஜ் தலைமை வகித்தார்,கல்வி புரவலர்கள் ராஜேந்திரன்,இராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,ஆசிரியர் செந்தில் சிவக்குமார் வரவேற்றார்,நிகழ்ச்சியில் தமிழக அரசு உத்தரவுப்படி பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,அதனைத்தொடர்ந்து மாணவ மாணவியர்களுக்கு இலவச வினா-விடை தொகுப்பு,எழுது பொருட்கள்,திருக்குறள் புத்தகம்,மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது,
மேலும் இந்த நிகழ்ச்சியில்
தன்னார்வலர்கள் சதீஷ், கருப்பசாமி,
ஆசிரியர்கள் ரேவதி, கலைச்செல்வி, கல்வியாளர் பரத்,இளங்கோ மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிகல்வித் திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராமு நன்றி கூறினார்.