கன்னியாகுமரி ,செப்.18-
கன்னியாகுமரி கே.கே.ஆர் அகாடமி பரதநாட்டிய சிறப்பு நடனப் பயிற்சி நிலையம் சார்பில் பரதநாட்டியம் சிறப்பு நடன பயிற்சி நடந்தது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று அகாடமியில் வைத்து நடைபெற்றது .பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு கே.கே.ஆர் அகாடமி நிறுவனர் ஹெச்.ராஜ் தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் வினிஷா மணிஸ் வரவேற்றார்.
லாரன்ஸ் முன்னிலை வகித்தார் .ராஜாஸ் கல்வி நிறுவனம் முதல்வர் நளினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரதநாட்டிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசினை வழங்கினார் .முகம்மது ரிஸ்வான் நன்றி கூறினார்.