25 ஆண்டு கால தற்காப்பு கலை மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய ரென்ஷி கார்த்திகேயனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பு…
மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் டாக்டர் ரென்ஷி கார்த்திகேயன் கடந்த 25 வருடத்திற்கு மேலாக கராத்தே மாணவர்களுக்கு கிக்ஸ் ஆண்ட் பஞ்சஸ் அகடாமி மூலம் கராத்தே கற்று கொடுத்து வருகின்றார்.
கார்த்திகேயன் கடந்த 25 ஆண்டு கால அனுபவத்தில் இண்டர்நேசனல், தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் சுமார் 45 பதக்கங்களை வென்றுள்ளார்.
அதேபோல் 2008 சிறந்த கராத்தே நடுவர் விருதும், 2018 ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் விருதும், 2022ம் ஆண்டு மேஸ்ட்ரோ விருது பெற்றுள்ளார்.
மலேசியா மற்றும் இந்தோனேசியாவில்
இண்டர்நேஷனல் பதக்கம் வென்றுள்ளார்.
அதேபோன்று தன்னுடைய கிக்ஸ் ஆண்ட் பஞ்சஸ் அகடாமி மூலமும் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட கராத்தே சாம்பியனை உருவாக்கி உள்ளார்.
தனது பயிற்சி மையத்தில் கராத்தே கற்று வரும் மாணவர்கள் 13 இண்டர்நேஷனல், 19 தேசிய அளவிலும், 17 மாநில அளவிலான போட்டிகள் பங்கேற்று
351 தங்கபதக்கம் உட்பட
மொத்தாமக் ஆயிரத்து 1068 மாணவர்கள் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்தநிலையில் பல்வேறு சாதனை படைத்த ரென்ஷி கார்த்திகேயனுக்கு சென்னையில் அக்ஸ்பா பல்கலைகழகம் நடத்திய பட்டமளிப்பு விழாவில் மார்ஷல் ஆர்ட்ஸ் பிரிவில் கவுரவ டாக்டர் பட்ட வழங்கி கவுரவித்துள்ளது.
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற ரென்ஷி கார்த்திகேயன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் தன்னுடைய செயலுக்கான அங்கீகாரமாக டாக்டர் பட்டம் கிடைத்துள்ளதாக பெருமிதம் கொண்டார். மேலும் தன்னுடைய மாணவர்களை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வைத்து வெற்றி பதக்கம் பெறுவதே என்னுடைய பெரிய இலக்கு என்று தெரிவித்தார்.