திண்டுக்கல்லில் ஆதவன் உலக செம்மொழி தமிழ்ச்சங்கம் மற்றும் கோல்டன் லோட்டஸ் பவுண்டேசன் ஆகியவை இணைந்து பாரதி கண்ட புதுமைப் பெண்களின் திறமைக்கும் சாதனைக்கும் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் விவேரா கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆதவன் உலக செம்மொழி தமிழ் சங்கத்தின் நிறுவனர் Dr.மெர்சிசெந்தில்குமார், சமூக ஆர்வலர் Dr.N.M.B. காஜாமைதீன் ,கோல்டன் லோட்டஸ் பவுண்டேசன் நிறுவனர்
G.சமேஸ்வரி குருவாயூரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார்கள். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மகளிர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மகளிர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.



