மதுரை மார்ச் 9,
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெறும் விழாவில் மகளிர் சுயஉதவி குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு ஆட்டோ வாகனங்கள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம், திருப்பாலை. யாதவர் பெண்கள் கலைக்கல்லூரியில் மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் உடன் உள்ளனர்.