நாகர்கோவில் – நவ – 24,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காமராஜர் மக்கள் கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்துவது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆர்பாட்டம் நடைபெற்றது .. இந்த ஆர்ப்பாட்டத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள மலைகள், குளங்கள், அனைகள், ஆறுகளில் உள்ள கனிம வளங்களை கேரளாவிற்கு நாள் ஒன்றுக்கு 500 க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் மூலம் கடத்தப்படுவதை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும். முடங்கி கிடக்கும் 4 வழி சாலை பணிகளை துரிதப்படுத்த கோரியும், குமரி மாவட்ட ரயில் நிலையங்களை கேரளா கோட்டத்தில் தற்போது இருப்பதை பிரித்து மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும், ஆழ் கடலில் சிக்கி தவிக்கும் மீனர்வர்களை காப்பாற்ற ஹெலிகாப்ட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளை இரவு நேரங்களிலும் மருத்துவர்கள் பணியில் இருக்கவும், மருத்துவ மனைகள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் , தமிழகத்தின் தென் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் எந்த பிரச்சனைக்கும் சென்னை நோக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை மாற்றி மதுரையில் மொத்த அரசு துணை அலுவலகங்களும் செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் ஆகாஷ் தேவ் , குமரி மாவட்ட ஜனதாதளம் தலைவர் அருள்ராஜ், ஐக்கிய ஜனதா தள அகில இந்திய செயற்குழு தெய்வராஜன், முன்னாள் காந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் செல்லத்துரை, ஜனதாதளம் இராஜசேகரன், மணி, பார்வதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.