நாகர்கோவில் – செப் – 27,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய திராவிட முற்போக்கு கழகம் மாவட்ட கழக செயலாளர் ஐடன்சோணி தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கடலோர கிராமத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கழகத்தினுடைய பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிள்ளியூர் தாலுகாவில் கடலோர பகுதி சில இருக்கின்ற அத்தனை கிராமங்களையும் மத்திய அரசாங்கம் அளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அங்கே தாது மன் அள்ளகூடிய ஒரு திட்டத்தை ஒரு சுரங்கப்பாதை அமைக்க அமைக்கின்றோம் என்று ஒரு புதிய ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கின்றார்கள். இதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் வன்மையாக எதிர்க்கிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினுடைய சார்பாக நான் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால் அந்த இடத்திலிருந்து ஒரு பிடி மண்ணை கூட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினுடைய தொண்டர்கள் இருக்கும் வரை எடுக்க விடமாட்டோம் எங்களுடைய உயிரை தாண்டி தான் அந்த இடத்திலே நீங்கள் மண் அள்ள முடியும் என்று கோரிக்கை வைப்பதற்காக இன்றைக்கு மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து மனு கொடுக்க வந்திருக்கின்றோம் . மேலும் இரண்டு மனுக்களை கூட கொடுக்க இருக்கின்றோம் ஒன்று மார்த்தாண்டம் மேம்பாலத்திலே வாகனங்களில் செல்வதற்காக ஆட்டோவில் கொண்டு மக்களை இறக்கி விடுகின்ற வேளையிலே அங்கே இருக்கிற அதிகாரிகள் அந்த ஆட்டோ டிரைவர்களை பிடித்து வன்மையாக தாக்குவதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு ஆயிரம் ரூ. 500 ரூபாய் அபராதம் விதிக்கின்ற சூழ்நிலை அதையும் நாங்கள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் சொல்ல இருக்கின்றோம். அதேபோல மார்த்தாண்டத்திலே புதிதாக உதயமான மீன் சந்தையால் மக்கள் வந்து அந்த ஒரு குறுகிய பாதையிலே வாகனங்களை கொண்டு மீன் வண்டிகளை கொண்டு இறக்கி அந்த பாதையை அடைத்து மீனை எல்லாம் வைத்து நடந்து செல்ல முடியவில்லை. வாகனத்தில் செல்ல முடியவில்லை பைக்கில் கூட செல்ல முடியவில்லை தினந்தோறும் இரண்டு மூன்று விபத்துக்கள் தொடர்ந்து நடக்கிறது. இதை தட்டி கேட்டால் உடனே அவர்களை அடித்து உதைப்பது வாடிக்கையாக உள்ளது ஏற்கனவே மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையும் நாங்கள் ஆட்சியாளிடத்திலே கூற இருக்கின்றோம். இந்த மூன்றுக்கும் ஆட்சியாளர் எங்களுக்கு சரியான ஒரு தீர்வை எடுப்பார்கள் என்று நம்புகிறோம் இல்லை என்று சொன்னால் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினுடைய சார்பிலே மக்களை ஒன்று திரட்டி கழக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தை அந்த கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடற்க்கரை கிராமங்களில் நடத்துவோம் என கூறினர்.