மதுரை மே 1,
மதுரையில் சார் பதிவாளர் வீட்டில் ரூ. 1. 88 லட்சம் பறிமுதல் மதுரை மாவட்டம் கருங்காலக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். இதில் கருங்காலக்குடி சார்பதிவாளர் அருள்முருகன் என்பவரிடம் கணக்கில் வராத ரூ.1.80.700 ரூபாய் இருப்பது தெரியவந்ததையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவரிடம் 4 மணி நேரமாக கருங்காலக்குடி அலுவலகத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில் மேலூரில் உள்ள சார் பதிவாளர் அருள்முருகன் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், ரூ. 1. 88 லட்சத்தை பறிமுதல் செய்தனர்