அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் அதலையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜோதிபாசு சிக்கந்தர்சாவடி பகுதி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தில் தலைவராகவும் விஜயகுமார் செயலா
ளராகவும் இருந்துள்ளனர் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பதில் இருவருக்கும் இடையே அடிக்கடி
தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் அடிக்கடி
ஏற்ப்பட்ட சங்கப் பிரச்சனை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்
ஜோதிபாசு
தனது ஆட்டோவில் சிக்கந்தர் சாவடி பகுதியில் ஆட்டோவில் சென்ற போது அவரை
வழி மறித்த
விஜயகுமார் ஜோதிபாசுவை கண் இமைக்கும் நேரத்திற்குள் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார் .
இதில்
படுகாயம் அடைந்த
அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்து
வமனைக்கு
கொண்டு செல்லும் வழியில் ஜோதிபாசு உயிரிழந்தார்.
இது குறித்து, வழக்குப்
பதிவு செய்த அலங்காநல்லூர் போலீசார் கொலையாளி விஜய
குமாரை கைது
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.