ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அறம் அறக்கட்டளை மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம். செந்தில் சார்பில் சர்க்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சர் வழங்கப்பட்டது. இதில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. கே.சரஸ்வதி அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா சிவ்க்குமார், பாரதீய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் செந்தில், மாவட்ட துணைத் தலைவர் குணசேகர், மாவட்ட பொது செயலாளர் புனிதம் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



