சென்னை, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை அடுத்த ஆரிக்கம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பாராட்டு விழாவானது
இப்பள்ளியின் முன்னாள் மாணவர்,
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், வெள்ளானூர் ஊராட்சி மன்ற தலைவர், அ.பிரபாகரன் வெள்ளானூர் ஊராட்சி மன்றத் தலைவராக 5 ஆண்டு காலம் சிறப்பாக பணியாற்றிய அவருடைய செயலை பாராட்டு விதமாக பள்ளியின் சார்பிலும் வெள்ளனூர் ஊராட்சியில் பணியாற்றிய பணியாளர்களின் சார்பிலும் பிரபாகரன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஆரிக்கம்பேடு மண் மீதும், மக்கள் மீதும் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர் பிரபாகரன் அவர்கள். எனவே அவர் பள்ளிக்காகவும் ஊராட்சிக்கு செய்த சேவையை பாராட்டு விதமாக பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் ஆ. பிரபாகரன் அவர்கள் செய்த சேவையை பட்டியலிட்டு வாழ்த்தி பேசினார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.ஜெயராமன் அவர்கள்.
இவ்விழாவில் நடனம் ஆடி தங்களுடைய திறமைகளை காண்பித்த 27 குழந்தைகளுக்கு தலா ரூபாய் 500 வழங்கி குழந்தைகளை பாராட்டினார் ஆ.பிரபாகரன் அவர்கள். இவ்விழாவில்,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதி, எஸ் எம் சி கல்வியாளர் அறவாழி, பள்ளி மேலாண்மை குழு தலைவி மகாலட்சுமி ,லதா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள்,
தன்னார்வலர்கள் பாலா, பூபாலன், கௌசல்யா,
பிரண்ட்ஸ் ஆடியோ சிவகுமார் ஊராட்சியில் பணியாற்றும் பணியாளர்கள், பெற்றோர்கள் அனைவரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.