ராமநாதபுரம், ஆக.29-
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் சார்பில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ராமநாதபுரம் சந்தைதிடல் அண்ணாசிலை அருகில் தொடங்கிய பேரணியை மாவட்ட தலைவர் இப்ராஹீம் சாபிர் தொடங்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைச்செயலாளர் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்ட இப்பேரணியில் போதை பொருட்களுக்கு எதிரான கோசங்கள் எழுப்பப்பட்டன.
அண்ணாசிலையில் துவங்கிய பேரணி சின்னக்கடை தெரு, கொல்லம் பட்டரைத்தெரு, பாம்பூரணி, தக்வாமஸ்ஜித், குமரையாகோயில் வழியாக பாரதிநகர் புகாரி அப்பா பள்ளிவாசல் அருகில் முடிவடைந்தது.
இப்பேரணியின் நிறைவு நிகழ்வில் மாவட்ட செயலாளர் தினாஜ்கான் பேசினார் .மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் நன்றி கூறினார்.