திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வருடாந்தர என்.சி.சி. பயிற்சி முகாம் நிகழ்ச்சி அக்டோபர் 16 தேதி முதல் 25 தேதி வரை நடைபெற்றது. இந்த முகாமில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 500 மாணவ, மாணவியர்கள் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் இருந்து கலந்து கொண்டனர். இந்த முகாமில் ராணுவ நடை பயிற்சி, துப்பாக்கி சுடுதல் பயிற்சி, திண்டுக்கல் தீயணைப்பு துறை அதிகாரிகளின் துணையுடன் தீயணைப்பு பயிற்சி, திண்டுக்கல் அரசு மருத்துவமனை 108 அவசர சிகிச்சை அதிகாரிகளின் துணையுடன் சிபிஆர் முதலுதவி பயிற்சி, யோகா பயிற்சி மற்றும் தடை தாண்டுதல் பயிற்சி ஆகியவை நடைபெற்றது. மேலும் தேசியப்படை மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், சதுரங்கம், பூப்பந்து மற்றும் ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. முகாமின் இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு லெப்டினட் கர்னல் ஜெகதீசன் 14 (TN) BN NCC தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.ஏ. கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) டாக்டர். வின்சென்ட் ஆண்டனி ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதில் சுபேதார் மேஜர் விஷ்வனாதா மற்றும் சுபேதார் சசி உடன் இருந்தனர். திண்டுக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளை சார்ந்த என்.சி.சி. அதிகாரிகள் TN 14 பட்டாலியனை சார்ந்த ராணுவ அதிகாரிகள் முகாமை வழிநடத்தினர். பி.எஸ்.என்.ஏ. கல்லூரியின் என்.சி.சி. மாணவ, மாணவியர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். இவ்விழாவினை பி.எஸ்.என்.ஏ. கல்லூரியின் என்.சி.சி. அதிகாரி லெப்டினட் டாக்டர். பா. அருண் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.



