தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னா பிஷேகம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தருமபுரியில் உள்ள கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி உட னாகிய மருத வாணிஸ்வர் கோயில், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுனர் சுவாமி கோயில், நெசவாளர்நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோயில், குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோயில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வர் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.



