அஞ்சுகிராமம் – மார்ச்-11
குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் வருகைக்கு பின் குமரி மாவட்டத்தில் வழக்குகள் வேகம் எடுப்பதை குமரி மாவட்டத்தில் மகளிர் மற்றும் பொதுமக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திருவட்டாரில் காணாமல் போன மாணவிகளை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்தது, நாகர்கோவிலில் மளிகை கடை ஊழியரை நேற்று முன்தினம் கொலை செய்த நபரை பிடித்தது, குற்றவாளியை கைது செய்யும்போது தப்பி ஓடியாதால் கை கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதி. இன்னும் பல விஷயங்களில் எஸ்பி ஸ்டாலின் அவர்களின் அதிரடி நடவடிக்கைகளையும், மண்டைக்காடு கோவில் திருவிழாவில் பணியில் இருந்த சக போலீஸாருடன் உணவு அருந்தியது, தினமும் மத்தியான வேளையில் சந்தித்து மனு அளிக்கலாம் என்ற அறிவிப்பு, கல்வி நிலையங்கள், மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்கியது. உயிர்காக்க தலைகவசம் கட்டாயம் அணிய விழிப்புணர்வு என அதிரடியாகவும், நேர்மையாகவும், எளிமையாகவும் செயல்பட்டு வரும் மாவட்ட எஸ்.பி. மருத்துவர் ஸ்டாலின் அவர்களுக்கு மகளிர் தின விழாவில் லெட்சுமிபுரம் வள்ளுவர் மகளிர் இயக்கத்தினர் மற்றும் செயலாளர் கீதா காந்திராஜ் மற்றும் பொது மக்கள் பாராட்டினர்.