மதுரை செப்டம்பர் 7,
மதுரை மாவட்டம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குள் நடக்கும் அராஜகம்..!!
தென்தமிழகத்திலே பெயர் பெற்ற மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பொருளாதாரத்தில் கஷ்டபடும் ஏழை எளிய மக்களே, பெரும்பாலும் இந்த மருத்துவ மருத்துவமனைக்கு வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனங்களால் பாதிக்கப்படும் ஏழை மக்களின் தற்போது அவல நிலையாக உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையை நம்பி பிரசவத்திற்காக சிரமப்பட்டு வரும் நேரத்திலும், இங்கு பிரசவத்திற்கு வரும் ஏழை தாய்மார்களிடம் அடாவடித்தனமாக கிரிஸ்டல் என்ற நிறுவனம் நடந்து கொள்கிறது. மதுரை அரசு மருத்துவமனையில் குத்தகைக்கு எடுத்துள்ள கிரிஸ்டல் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் மிகப்பெரிய கையூட்டு நடைபெறுகிறது. இங்கு நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் கொடுத்தாக வேண்டும் என்று கரா ராக கூறுகிறார்கள் எங்களுக்கு 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ஒரு நபருக்கு கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும் என்று கரா ராக கூறி வசூல் செய்து வருகின்றனர். இது மருத்துவமனைக்கும் தெரியும் என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த நிறுவனத்தின் மீது மருத்துவமனையின் கீழ் குத்தகைக்கு எடுத்து வரும் கிறிஸ்டல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமா.? ஏழை தாய்மார்கள் மற்றும் பெரியவர்கள், அனைவரும் புலம்பி தவிக்கின்றனர். நாங்கள் பணம் இருந்தால் மற்ற தனியார் மருத்துவமனை சென்று பார்ப்போம். அதைவிட இங்கு கூடுதல் கட்டணம் கிறிஸ்டல் நிறுவனத்தின் வேலை செய்யும் பணி ஆட்கள் வசூல் செய்கின்றனர். இதை யாரிடம் தெரிவிப்பது என்று கலக்கமாக இருக்கிறது என்று வேதனையுடன் ஏழை தாய்மார்கள் கூறுகின்றனர்.
நடவடிக்கை எடுக்க படுமா என்று சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.