மத்திய பட்ஜெட்டில் கட்டுமான துறைக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் Er.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், ஜெக. முருகன் மாநில துணை செயலாளர் கண்டன உரையாற்றினார், கட்டட பொறியாளர்கள் மற்றும் மனை தொழில் செய்வோர் பலர் கலந்துகொண்டு கட்டுமான பொருட்களின் ஜிஎஸ்டி வரியை ஐந்து சதவீதமாக குறைக்க வேண்டும், கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் அமைத்திட வேண்டும் கட்டுமான பொறியாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட பொறியாளர் கவுன்சில் உடனடியாக ஏற்படுத்த வேண்டும், கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக முழக்கங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் Er.பாலாஜி வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட துணைத் தலைவர் Er.அபிராமசுந்தரம் முன்னிலை விகித்தார்.



