மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் கிராமத்தில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்; பாமக, அதிமுக, நாம் தமிழர் கட்சியில் உள்ள இளைஞர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்:-
குத்தாலத்தை அடுத்த கோமல் கிராமத்தில் மாற்று கட்சியினர் ஏராளமானோர் குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் செயலாளர் ராஜா ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். பாமக ஒன்றியக்குழு உறுப்பினர் டாக்டர் சிவக்குமார் மற்றும் அதிமுக பொறுப்பாளர் காமராஜ் ஆகியோர் கோமல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக, அதிமுக, நாம் தமிழர் கட்சியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கோமல், கோனேரிராஜபுரம், கோடிமங்கலம், மாந்தை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 300 க்கு மேற்பட்டோருடன் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர் செல்வமணி, ஒன்றிய செயலாளர் , ராஜா,அப்துல் மாலிக், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சௌமியன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வின்சென்ட் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.