பெரியகுளம் நவ – 07
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டியில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் ஸ்ரீ கலைமகள் வாசுகி கல்வி அறக்கட்டளை சார்பில் மறைந்த முன்னாள் தலைமை ஆசிரியை வாசுகி பாலமுருகன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் வள்ளலார் சத்திய ஞானசபை பணியாளர்களுக்கு ஸ்ரீ கலைமகள் வாசுகி கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும்,வடுகபட்டி அஇதிமுக பேரூர் கழக செயலாளருமான பாலமுருகன் வேட்டி,சேலைகள் வழங்கினார்.நிகழ்வில் வள்ளலார் சத்திய ஞான சபை நிர்வாகிகளும் உடனிருந்தனர். மேலும் கடந்த தீபாவளி திருநாள் அன்று வடுகபட்டி பேரூர் கழகத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது