சிவகங்கை மாவட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் இரா.கஜலட்சுமி, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை சார்பில் திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தலைமையில் மாவட்ட ஆட்சியாளர் சிறு கூட்டரங்கில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி இணைப்பதிவாளர் (கூட்டுறவுசங்கங்கள்) இராஜேந்தி பிரசாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துக்கழுவன், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பனன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



