கிருஷ்ணகிரி அக் 18: அதிமுக கழக 53 ஆம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் தலைமையில் இன்று பல்வேறு இடங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பர்கூர் ஒன்றிய அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன் கட்சி அலுவலகத்தின் முன் அமைக்கப்பட்டுள்ள அதிமுக கட்சி கொடி கம்பத்தில் முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் கழகக் கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதேபோல் பர்கூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல் பி.ஆர்.சி மாதேபள்ளி மற்றும் பர்கூர் பி.டி.ஓ அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் அதிமுக கழக கொடி ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால், எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் மாதையன், மாணவரணி செயலாளர் வெற்றிச்செல்வன், வர்த்தக அணி செயலாளர் தூயமணி, நகர கழக செயலாளர் துரைஷ் ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.