வேலூர்_15
வேலூர் மாவட்டம் ,கே .வி. குப்பம் வட்டம், மேல்மாயில் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற அக்னி வசந்த தீமிதி திருவிழாவினை முன்னிட்டு கெங்கை அம்மன் மற்றும் காளியம்மன் திருவிழாவும் வெகு விமரிசியாக நடைபெற்றது இதில் காப்பு கட்டுதல், கொடியேற்றுதல் நிகழ்ச்சி ,மகாபாரத சொற்பொழிவு, அர்ஜுனன் தபசு, துரியோதனன் படுகளம், ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றதை தொடர்ந்து தீமிதி திருவிழாவும் நடைபெற்றது இதில் மேல்மாயில் கிராம பொதுமக்கள் ,விழா குழுவினர்கள் ,இளைஞர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர் .