தென் தாமரைகுளம்,ஜன.23-
அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலைத்துக்குட்பட்ட தேவி முத்தாரம்மன் திருக்கோவில் நூதன ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா அடுத்த மாதம் 7 ம் தேதி தொடங்கி 10 ம் தேதி வரை நடைபெறுகிறது .
மகா கும்பாபிஷேக விழாவுக்கான கால்நாட்டு விழா நடந்தது. இதில் கோவில் அறங்காவலர்கள் வழக்கறிஞர் கே.எஸ்.மணி ,பேராசிரியர்.கருணாகரன்,ராஜசுந்தரபாண்டியன்,ஸ்ரீனிவாசன்,கோகுலகிருஷ்ணன் ,பொருளாளர் சுயம்புலிங்கம் ,கணக்கர் ராஜசேகர் உட்பட ஊர் மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.