சுங்கான்கடை அக் 04:
குமரி மாவட்டம் சுங்கான்கடையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் மலர் அமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து அறிவொளி இயக்கத்தின் தொண்டர்கள் கூடுகை நடைபெற்றது.
மலர் அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவர் ஜாண் சிலிபாய் அறிவொளி பாடல் பாட , அறிவியல் இயக்க மாவட்ட பொருளாளர் செல்ல தங்கம் அனைவரையும் வரவேற்றார்.
அறிவொளி இயக்க காலத்தில்
தன்னார்வலராக இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுத்தறிவு இயக்கத்தை முன்னின்று நடத்திய தன்னார்வலர்களின் மறைவுக்கு மலர் மாவட்ட செயலாளர் செயலாளர் ஜினோ பாய் தீர்மானம் வாசிக்க அனைவராலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பேராசிரியர் நாகராஜன் தலைமை உரையாற்றினார்.
அறிவொளி இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட ஷெலின் மேரி தொடக்க உரையாற்றினார்.
அறிவொளி இயக்கத்தின் மத்திய திட்ட ஒருங்கிணைப்பாளராக விளங்கிய பேராசிரியர் ஜேம்ஸ் ஆர் டேனியல்,சிறபுரை ஆற்றினார். நாகர்கோவில் வட்டார ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட வங்கி மேலாளர் ஆன்ட்ரூஸ் , அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பொறுப்பாளராக விளங்கிய ஐயப்பன், தக்கலை ஒன்றிய பொறுப்பாளராக விளங்கிய முன்னாள் வட்டாட்சியாளர் கவிஞர் தக்கலை ஹலிமா, குருந்தன்கோடு ஒன்றிய பொறுப்பாளராக விளங்கிய ஆசிரியர் முருகன்,
இராஜாக்கமங்கலம் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் வேலவன், ஆசிரியர் தாமோதரன்,
முஞ்சிறை வட்டார ஒருங்கிணைப்பாளர்
பத்மதேவன்,
பைசல், ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் சசிக்குமார் , மாநில செயலர் ஜினிதா .ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அறிவொளி தொண்டர்கள் தங்களது அனுபவப் பகிர்வை பகிர்ந்து கொண்டனர்.