தேனி மாவட்டம், ஜூலை – 26 தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டார வள மையத்தில் 15 – வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத வாசிக்க தெரியாதவர்களுக்கான வயது வந்தோர் கல்வி திட்டம் ஜூலை – 15 ம் தேதி 82 பள்ளிகளில் தொடங்கப்பட்டது தற்போது அனைத்து மையங்களிலும் மையச் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன இவ் திட்டத்தில் மொத்தம் 1221 கற்போர்கள் பயின்று வருகின்றனர் இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உத்தமபாளையம் ஒன்றியத்தின் பொறுப்பு மேற்பார்வையாளர் திரு.க.செல்லக்கண்ணு அவர்களின் தலைமையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட செயல்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமதி.புவனேஸ்வரி அவர்கள் ஒருங்கிணைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது



