கிருஷ்ணகிரி மே 16
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை, பர்கூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களில் 1434 ஆம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில்
ஊத்தங்கரை வட்டாட்சியர் மோகன் தாஸ் தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ் குமார் கலந்துக்கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இம்முகாமில் தனி வட்டாட்சியர் குமரவேல், தலைமையிட துணை தாசில்தார் ஜெயராமன், மண்டல துணை வட்டாட்சியர்கள் நாகேந்திரன், தனலட்சுமி, சகாதேவன், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபால், வட்ட சார் ஆய்வாளர் கல்பனா, தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர்கள் ராமர், கார்மேக கண்ணன், வேளாண்மை துறை உதவி இயக்குனர் கருப்பையா, வட்டார புள்ளியல் துறை ஆய்வாளர் ரொசாரியோ, வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர்.