நாகர்கோவில் – அக – 09,
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மேயர் . ரெ . மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.
கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி இந்திய தேர்தல் ஆணையம் வருகிற 01.01.2025 தேதியை தகுதி ஏற்ப்படுத்தும் நாளாக கொண்டு தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் 29 10 2024 அன்று வெளியிட உள்ளது. கன்னியாகுமரி நாகர்கோயில் மற்றும் குளச்சல் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் 29 10 2024 முதல் 28 11 2024 வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் பெயர்கள் நீக்கவும் திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர 09.11. 2024, (சனிக்கிழமை) 10.11. 2024 (ஞாயிற்று கிழமை) , 23.11.2024 (சனிக்கிழமை) , 24.11.2024, (ஞாயிற்று கிழமை) ஆகிய நான்கு நாட்கள் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது இறுதி வாக்காளர் பட்டியல் 6 1 2025 அன்று வெளியிடப்படும் அதன்படி இந்த நாட்களில் வாக்காளரே தாமாக முன்வந்து வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது விவரங்கள் சரி பார்த்து விடுபட்ட வாக்காளர்களும் இடம் மாறிய வாக்காளர்களும் இதுவரை இடம்பெறாத பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் தொகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் 01. 01. 2025 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க நீக்க ஆதார் எண்ணை இணைக்க திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வடிவங்கள் 6, 6 பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அந்தப் படிவங்களை அந்தந்த முகாம் மையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
இந்த சிறப்பு முகாம்களில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் மாவட்ட கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மாநகர ஒன்றிய நகர பகுதி பேரூர் வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள் அனைத்து சார்பு அணிகளில் நிர்வாகிகள் அந்தந்த வாக்குச்சாவடி நிலைய முகவர்கள் (BLA2) வாக்குச்சாவடி பாக முகவர் குழு உறுப்பினர்கள் (BLCS) ஆகியோர் இணைந்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் திருத்தங்கள் முகவரி மாற்றம் செய்தல் ஆதரிங்களை வாக்காளர் பட்டியலுடன் நிலைத்தல் போன்ற பணிகளை சிறப்பாக மேற்கொண்டு தகுதி உள்ள வாக்காளர்களை விடுபட்டு விடாமல் இணைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு வாக்காளர் சேர்க்கும் பணியின் போது நமது கழகத்தின் சார்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA 2), வாக்குச்சாவடி பாக முகவர் குழு உறுப்பினர்கள் (BLCS) ஆகியோர் இந்த பணியினை முழுமையாக முழுமையாக இருந்து 2026 சட்டமன்ற தேர்தல் முடியும் வரை தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுடன் (BLO) இணைந்து இப்பணிகளை கண்காணிக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.