சென்னை அக் 7
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தல் கூட்டம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
புதிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் சௌந்தராஜன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவை அடுத்து
1.10.2024 ஆம் தேதி மாநில மாவட்ட முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேரவை தலைவராக சௌந்தராஜன் பொதுச்செயலாளராக வெள்ளையனின் இளையமகன் மெஸ்மர் காந்தையும் தேர்வு செய்தனர் . பேரவையின் தலைவர் வெள்ளையன் மறைந்து சில நாட்களிலேயே தலைமை பொறுப்பு தேர்வு நடைபெற காரணம், பேரவையில் குழப்பம் ஏற்படுத்திய டைமண்ட் ராஜா வெள்ளையன் என்பதை தெளிவாக்குகிறோம்.
கடந்த மாதம் 29 ஆம் தேதி டைமண்ட் ராஜா 7 மாவட்ட தலைவர்களை மட்டும் வைத்து கொண்டு அவரே தன்னிச்சையாக தலைவர் என்று கூறிகொண்டார் . இது பேரவையின் சட்டவிதிகளுக்கு முரணானது.
ஆகவே பேரவையின் விதிகளை மதிக்காத டைமண்ட் ராஜா மற்றும் 5 க்கும் மேற்பட்ட நபர்களை பேரவையிலிருந்து நீக்கியுள்ளோம். எனவே டைமண்ட் ராஜாவுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைக்கும் எந்த சம்ம்தமும் இல்லை . தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பெயரை பயன்படுத்துபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் பேரவையின் தலைவராக இருந்த வெள்ளையன் காட்டிய வழியிலேயே வணிகர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவோம் என்று தெரிவித்தார்