தக்கலை , பிப்- 7
தக்கலை அருகே கொல்லன்ளையில் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு மூலச்சலை சேர்ந்த சுகுமார் என்பவருக்கும் சொத்து பிரச்சனை சம்பந்தமாக வழக்கு உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகின்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி செல்லப்பன், மனைவி தங்காள் ஆகியோர் சம்பந்தப்பட்ட தோட்டத்தில் ரப்பர்பல் எடுத்துக் கொண்டிருந்த போது, சுகுமார் இருவரையும் அரிவாளால் வெட்டினர்.
இது தொடர்பாக செல்லப்பன் கொடுத்த புகார் பேரில் தக்கலை போலீசார் சுகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்..இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக பத்மநாதபுரம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் சுகுமாருக்கு 2 மாதம் கடும் காவல் தண்டனையும், ரூ.500 அபராதமும், கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக 7 வருடம் தண்டனையாம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து பத்மநாதபுரம் உதவி அமர்வு நீதிபதி மாரியப்பன் தீர்ப்பு வழங்கினார்.
மேலும் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த உதவி ஆய்வாளர் மற்றும் வழக்கு விசாரணை செய்து இரண்டு காவல் ஆய்வாளர்கள் வழக்கை சரிவர விசாரணை செய்யாமல் முக்கியமான சாட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் . குற்றம் சாட்டப்பட்ட எதிரிக்கு சாதகமாக நடந்துள்ளனர். இதனால் துறை ரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென் மண்டல காவல் துறை தலைவருக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.